Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

ஐக்கிய தேசிய கட்சியின் அனைத்து உறுப்பினர்களுக்கும் அவசர அழைப்பு விடுத்துள்ள சஜித்!

எதிர்வரும் அரசியல் நடவடிக்கை தொடர்பில் விசேட கலந்துரையாடல் மேற்கொள்ள முன்னாள் அமைச்சர் சஜித் பிரேமதாஸவினால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர், மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் தொகுதி அமைப்பாளர்களை சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.
இன்று காலை 11.00 மணிக்கு ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவுக்கு வருமாறு சஜித் பிரேமதாஸவினால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றம் காரணமாக ஐக்கிய தேசிய கட்சி எவ்வாறு செயற்படுவது என்பது தொடர்பிலும் கலந்துரையாடல் மேற்கொள்ளப்படவுள்ளதாக தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இந்த கலந்துரையாடலில் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க கலந்து கொள்ள மாட்டார் என தெரிவிக்கப்படுகிறது.

Post a Comment

0 Comments