Home » » இன்று கிழக்குமாகாணத்தில் 12லட்சம் வாக்காளர்கள் வாக்களிப்பர்!

இன்று கிழக்குமாகாணத்தில் 12லட்சம் வாக்காளர்கள் வாக்களிப்பர்!


இன்று(16) சனிக்கிழமை  நடைபெறவிருக்கும் 8வது ஜனாதிபதிதேர்தலில் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த 11 இலட்சத்து 83 ஆயிரத்து 205 (1183205) வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். 


இவர்கள் வாக்களிப்பதற்காக அம்பாறை திருகோணமலை  மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் 1258 வாக்களிப்பு நிலையங்கள் உருவாக்கப்பட்டுள்ளதாக மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.




அம்பாறையில்:..
இதேபோன்று அம்பாறை மாவட்டத்தில் 5 இலட்சத்து 3 ஆயிரத்து 790 பேர் (503790) பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.
அம்பாறை தேர்தல் தொகுதியில் 174421 வாக்காளர்களும் சம்மாந்துறை தேர்தல் தொகுதியில் 88217 வாக்காளர்களும்கல்முனை தேர்தல் தொகுதியில் 76283 பேரும் பொத்துவில் தேர்தல் தொகுதியில் 164869 பேரும் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.


அம்பாறை மாவட்டத்தில் கல்முனை பொத்துவில் சம்மாந்துறை அம்பாறை ஆகிய 4 தொகுதிகள் உள்ளன.
கல்முனைத்தொகுதியில் 74வாக்களிப்புநிலையங்களும் பொத்துவில் தொகுதியில் 177வாக்களிப்புநிலையங்களும் சம்மாந்துறை தொகுதியில் 93வாக்களிப்பு நிலையங்களும் அம்பாறை தொகுதியில் 179நிலையங்களும் ஏற்படுத்தப்பட்டுள்ன.


இவர்கள் வாக்களிக்க 523 வாக்களிக்கும் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் உதவிதேர்தல்ஆணையர் திலின விக்ரமரத்ன தெரிவித்தார்.



திருமலை மாவட்டத்தில்::
திருகோணமலை மாவட்டத்தில் திருகோணமலை தொகுதியில் 94781 பேரும் மூதூர் தொகுதியில் 10730பேரும் சேருவில தொகுதியில் 79303 பேரும் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.
இவர்கள் வாக்களிக்க 307 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.



மட்டக்களப்பில்:;
மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள மூன்று தேர்தல் தொகுதிகளிலும் மொத்தமாக 3 இலட்சத்து 98 ஆயிரத்து 301 (398301) வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.
இதில் கல்குடா தேர்தல் தொகுதியில் 115974 பேரும் மட்டக்களப்பு தேர்தல் தொகுதியில் 187672 பேரும் பட்டிருப்பு தேர்தல் தொகுதியில் 94648 பேரும் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.
இவர்கள் வாக்களிக்க 428 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.


Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |