Advertisement

Responsive Advertisement

வீட்டுத்தோட்டம், இயற்கை சேதன பசளை தொடர்பான ஊக்குவிப்புச் செயலமர்வு

பாறுக் ஷிஹான்

நாட்டுக்காக ஒன்றினைவோம் தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் கல்முனை பிரதேச செயலகம் மற்றும் க

ல்முனை விவசாய விரிவாக்கல் நிலையம் என்பன ஏற்பாடு செய்யப்பட்ட வீட்டுத்தோட்டம் மற்றும் இயற்கை சேதன பசளை தொடர்பான ஊக்குவிக்கும் செய்லமர்வு கல்முனை விவசாய விரிவாக்கல் திணைக்களத்தில் வியாழக்கிழமை(17) இடம்பெற்றது.



கல்முனை பிரதேச செயலக பிரதி திடடமிடல் பணிப்பாளர்.கே இராஜதுறை தலைமையில் கல்முனை விவசாய விரிவாக்கல் திணைக்களத்தின் விவசாய பொறுப்பதிகாரி கி.கிருத்திகாவின்  நெறிப்படுத்தலில் காலை முதல் மாலை வரை இடம்பெற்றது.


இதன் போது வீட்டுத்தோட்டம் மற்றும் கூட்டேரு செய்கையாளர்கள் கலந்து கொண்டனர் இதன் போது இவர்களுக்கு இயற்கை சேதன பசளை செய்கை பற்றி வளவாளர்களால் தெளிவுட்டப்பட்டதுடன் செயன் முறை பயிற்சியுமளிக்கப்பட்டது


இந்த செய்லமர்வில் வளவாளராக விவசாய பாடவிதான உத்தியோகத்தர் ஏ.ஜெயிலாப்தீன் மற்றும் கல்முனை பிரதேச செயலக அபிவிருத்தி ஒருங்கிணைப்பு உத்தியோகத்தர்,அபிவிருத்தி 
உத்தியோகத்தர்கள், மற்றும் விவசாயவிரிவாக்கல் திணைக்களத்தின் உத்தியோகத்தர்கள் வீட்டுத்தோட்டத்தில் ஈடுபடுர்கள் கலந்து கொண்டனர்

Post a Comment

0 Comments