( அஸ்ஹர் இப்றாஹிம்)
சர்வதேச ஆசிரியர் தினத்தையொட்டி கல்முனை ஸாஹிரா தேசியக் கல்லூரி பழைய மாணவர் சங்க கொழும்பு கிளையினர் மேல் மாகாணத்தில் வாழும் கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரியில் கற்பித்து தற்போது ஓய்வுபெற்றுள்ள ஆசிரியர்களை கௌரவப்படுத்தும் நிகழ்வொன்றினை எதிர்வரும் 13 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கொழும்பு – 3 கொள்ளுப்பிட்டியிலுள்ள குயீன்ஸ் கபேயில் ஒழுங்கு செய்துள்ளனர்.
ஓய்வு பெற்ற ஆசிரியரையும் அவரது குடும்பத்தினரினரையும் சந்தித்து அவர்கள் சுக நலன்களை விசாரித்தல் , இலவச வைத்திய பரிசோதனை , ஆசிரியர்களுக்கான சுகாதார முறையில் சமைக்கப்பட்ட காலை உணவு பரிமாறல் , சுகாதார முறையிலான கலந்துரையாடல் , ஆசிரியர்களை பாராட்டி கௌரவித்து பரிசுப் பொருட்கள் வழங்கல் போன்ற நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன.
கல்முனை ஸாஹிரா தேசியக் கல்லூரி பழைய மாணவர் சங்க கொழும்பு கிளையினர் கடந்த வருடம் சர்வதேச ஆசிரியர் தினத்தில் கல்முனைப் பிரதேசத்தில் வாழும் இக்கல்லூரியில் கற்பித்து ஓய்வுபெற்ற ஆசிரியர்களுக்கு இவ்வாறான நிகழ்வொன்றினை ஒழுங்கு செய்திருந்தமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
0 Comments