Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

ஓய்வு பெற்றுள்ள அதிபர் பிரபாகரன் அவர்களின் பிறந்தநாளை பாடசாலை சமூகம் கொண்டாடி கௌரவித்தது!

கல்முனை உவெஸ்லி உயர்தரப்பாடசாலையில் நீண்ட காலமாக ஆசிரியராகவும் பிரதி அதிபராகவும் அதிபராகவும் சிறப்பாக கடமையாற்றி ஓய்வு பெற்றுள்ள வ. பிரபாகரன் அதிபர் அவர்களது அறுபதாவது பிறந்ததினம் பாடசாலை சமூகத்ததாலும் அதிபரின் கல்விப்புல நண்பர்களாலும் கேக் வெட்டி கொண்டாடப்பட்டு கௌவிக்ப்பட்டார்.
கல்முனை உவெஸ்லி உயர்தரப்பாடசாலையில் நடைபெற்ற இந் நிகழ்வில் ஆசிரியர்கள் மாணவர்கள் ஆகியோருடன் அதிபரின் நண்பர்களான கோட்டக்கல்வி அதிகாரிகள் வலயக்கல்வி அதிகாரிகள் கிழக்கு மாகாண கல்விப்பணிப்பாளர் மன்சூர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு அதிபரின் சேவைக்கும் பிறந்தநாளுக்கும் பொன்னாடை போர்த்தியும் பூமாலைகள் அணிவித்தும் வாழ்த்து தெரிவித்து கௌரவித்தனர்.
உவெஸ்லி உயர்தரப்பாடசாலையின் அதிபராக கலையரசன் அவர்கள் அன்றையதினம் அனைவர் முன்னிலையிலும் சம்பிரதாயபூர்வமாக கடமைகளை பொறுப்பேற்றிருந்தார்.
மாகாண தேசிய மட்ட போட்டிகளில் பங்கபற்றி வெற்றி பெற்ற மாணவர்களும் இந் நிகழ்வின்போது சான்றிதிழ்கள் வழங்கி கௌரவிக்கப்பட்னர்.




Post a Comment

0 Comments