விசேட அமைச்சரவை கூட்டத்திற்கு முன் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழிப்பது தொடர்பாக சூடான விவாதங்கள் இடம்பெற்றுள்ளன என தகவல் வெளியாகியுள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அழைப்பின் பேரில் தற்போது விசேட அமைச்சரவைக் கூட்டம் இடம்பெற்று வருகின்றது.
இந்நிலையிலேயே கூட்டம் ஆரம்பிப்பதற்கு முன்னராக ரணில் மற்றும் மங்கள இடையே நிறைவேற்று அதிகார ஒழிப்பு தொடர்பாக கடும் வாய்த்தர்க்கம் ஏற்பட்டதாக கூறப்படுகின்றது.
இதேவேளை சஜித் பிரேமதாச தலைமையிலான ஒரு குழு நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழிப்பதற்கு எதிர்ப்பு வெளியிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடைபெற்றுக் கொண்டிருக்கும் விசேட அமைச்சரவை கூட்டத்தில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையினை ஒழிப்பது தொடர்பாக பேசப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுவதாக அரசியல் ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
0 Comments