Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

மட்டக்களப்பில் இரவு வேளையில் ஐவரை மடக்கி பிடித்த கிராம மக்கள்; விசாரணைகளில் வெளியான அதிர்ச்சி தகவல்கள்!



மட்டக்களப்பில் நேற்று இரவு கொள்ளையில் ஈடுபடுவதற்கு சென்று கொண்டிருந்த ஐந்து பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மட்டக்களப்பு நகர் பகுதியில் பல கொள்ளை சம்பவங்களுடன் தொடர்புடைய கொள்ளைக்கோஷ்டியினைச் சேர்ந்த 5 பேரை மைக்கிரே ரக கைத்துப்பாக்கி ஒன்றுடன் நேற்று செவ்வாய்க்கிழமை (24) நள்ளிரவு கைது செய்ததுள்ளதுடன் முச்சக்கரவண்டி ஒன்று மற்றும் கையடக்க தொலைபேசிகள் வீடு உடைக்கும் பொருட்களை மீட்டுள்ளதாக மட்டு தலைமையக பொலிஸ் நிர்வாக பொறுப்பதிகாரி பி.எஸ்.டி.பண்டார தெரிவித்தர்.
குறித்த கொள்ளையர்கள் சம்பவதினமான நேற்று செவ்வாய்க்கிழமை இரவு சத்துருக்கொண்டான் பகுதியில் வீடு ஒன்றை கொள்ளையடிப்பதற்காக முச்சக்கரவண்டியில் சென்றிருந்தனர். இந்த நிலையில் இவர்களை பொதுமக்கள் மடக்கிபிடித்து பொலிஸ் குறிறப்புலனாய்வு பிரிவினரிடம் ஒப்படைத்தனர்.
இதணையடுத்து மாவட்ட பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவு பொறுப்பதிகாரி எஸ்.எஸ்.எஸ்.சுமந்த தலைமையிலான குற்றப்புலனாய்வு பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டதில் கள்ளியங்காடு மயானத்துக்கு அருகில் உள்ள வீடு ஒன்றில் மறைத்துவைக்கப்பட்டிருந்த மைக்கிரே ரக துப்பாக்கியினை மீட்டதுடன் 5 கையடக்க தொலைபேசிகள் முச்சக்கரவண்டி ஒன்று வீடுகளை உடைப்பதற்கான சுட்டியல் போன்ற கூரிய ஆயுதங்களை மீட்டனர்.
இதனை தொடர்ந்து குறித்த கைதுப்பாகியை கொள்ளையருக்கு விற்பனை செய்த கல்லடி கடற்கரை வீதியைச் சேர்ந்த ஒருவரை கைது செய்தனர்.
இந்த கொள்ளையர்கள் சம்பவதினம் கருவப்பங்கேணி ஊறணி பிரதேசத்தில் கொள்ளையிட திட்டம் தீட்டியுள்ளதாகவும், பொலிஸாரின் ஆரம்ப விசாரணையில் தெரியவந்துள்ளதாகவும் இச் சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர்கள் பங்குடாவெளி, கல்லடி, கள்ளியங்காடு போன்ற பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் எனவும் ஆயுதக்குழுக்களில் இருந்தவர்கள் எனவும் இவர்கள் கஞவாஞ்சிக்குடி , செங்கலடி, மட்டக்களப்பு போன்ற பல பகுதிகளில் கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்பு பட்டவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
அத்துடன் நீர்கொழும்பு மற்றும் களுவாஞ்சிக்குடி , செங்கலடி, மட்டக்களப்பு நீதிமன்றங்களில் கொள்ளை தொடர்பான வழக்குகள் இடம்பெற்றுவருவதாகவும் இவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.

Post a Comment

0 Comments