Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் யார்? மீண்டும் எழுந்தது குழப்பம்; மனோ வெளியிட்ட தகவல்!

தென்னிலங்கை சிங்கள சமூக ஊடகங்களில் பரப்பப்பட்டு வருவதை போல் "தானே ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட வேண்டும்" என்று ரணில் விக்கிரமசிங்க தெரிவிக்கவில்லை என மலிக் சமரவிக்கிரம சற்று முன் தன்னிடம் தெரிவித்ததாக அமைச்சர் மனோகணேசன் தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசிய கட்சியின் சிரேஷ்ட பிரமுகர்களை இன்று சந்தித்த ரணில், கட்சி உடையக்கூடாது என்பதையே பிரதானமாக வலியுறுத்தியதாக மலிக் தெரிவித்ததாக கூறியிருந்தார்.
இன்றைய சந்திப்பின் இறுதியில் வரும் ஞாயிறு இரவு ரணில்-சஜித் நேருக்கு நேர் சந்தித்து பேசி கட்சியின் இறுதி நிலைப்பாட்டை தீர்மானித்து, அதையடுத்து பங்காளி கட்சி தலைவர்களுடன் பேசுவோம் என தீர்மானிக்கப்பட்டதாகவும் அமைச்சர் தனது முகநூல் பக்கத்தில் தகவல் வெளியிட்டுள்ளார்

Post a Comment

0 Comments