Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

நீதி மன்றத்தை அவமதித்த ஞானசாரதேரர்!!


-அகரன்

முல்லைத்தீவு நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தில் அத்து மீறிக் கட்டப்பட்டு இருக்கின்ற பௌத்த விகாரையின் விகாராதிபதி கொலம்பே மேதாலங்காதர தேரர் நேற்று முன் தினம் புற்று நோயின் காரணமாக இறந்தமையை அடுத்து அவரது உடலை அடக்கம் செய்வது தொடர்பாக பல குழப்பகரமான சூழ்நிலைகள் நீராவியடிப்பிள்ளையார் ஆலய வளாகத்தில் ஏற்பட்டிருந்தது. 

இதனையடுத்து ஆலய வளாகத்தில் தேரரின் பூத உடலை தகனம் செய்வதற்கான ஏற்படுகள் துரித கதியில் நடைபெற்றது இவ்விடயத்தை அறிந்த ஆலய நிர்வாகத்தினர் முல்லைத்தீவு நீதவான் நீதி மன்றத்தை நாடி ஆலய வளகத்தில் தேரரின் உடலை தகனம் செய்வதற்கான தடையை பெற்றதுடன் கடற்கரைப் பகுதியிலே தேரரின் உடலை அடக்கம் செய்யப்படவேண்டும் என்ற நீதிமன்ற உத்தரவை பெற்றிருந்தனர்.

ஆனால் நீதிமன்ற உத்தரவை மீறி நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்திற்கு அருகாமையில் உள்ள ஆலயத்தின் தீர்த்த கேணியில் தேரரின் உடல் எரியூட்டப்பட்டது. இதை எதிர்த்து போராட்டம் மேற்கொண்ட பொது மக்கள் மற்றும் சட்டத்தரணிகள் மீது சிங்கள பௌத்த தேரர்கள் தாக்குதல் நடாத்தியிருந்தனர் அப்போது அங்கு கடமையில் நின்ற பொலிஸார் பார்வையாளராக இருந்தது மட்டுமன்றி நீதி மன்றத்தின் உத்தரவை மீறி செயற்பட்ட தேரர்கள் மீதும் சிங்கள மக்கள் மீதும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் அவர்களுக்கு சார்பாக செயற்பட்டனர். 

இதே விடயத்தை தமிழர்கள் செய்திருந்தால்; இராணுவமும் பொலிஸாரும் இணைந்து கண்ணீர்புகைக்குண்டு தாக்குதல் முதல் துப்பாக்கிபிரயோகம் வரை மேற்கொண்டு பல உயிர் இழப்புக்களை ஏற்படுத்தி இருப்பார்கள் இதற்கு கடந்த கால உதாரணங்கள் நிறையவே இருக்கின்றன மேலும் இவ் பௌத்த பேரினவாத அடக்குமுறையானது முல்லைத்தீவு மாவட்ட இந்துக்கள் மத்தியிலும் ஒட்டுமொத்த தமிழர்கள் மத்தியிலும் கடும்கோபத்தையும் விரக்தியைiயும் ஏற்படுத்தியுள்ளது.

கடந்த எழுபது வருடங்களுக்கு மேலாக இந்த நாட்டில் உள்ள சிங்கள பௌத்த மேலாதிக்கத்தின் வக்கிர தன்மைதான் கடந்த 30 வருடங்களுக்கு மேலாக நாட்டில் இரத்த ஆறு ஓடுவதற்;கான காராணமாக இருந்திருக்கின்றது. 

இன்றைய நவீன தொழிநுட்ப உலகத்திலும் காட்டுமிராண்டிகளாக இருக்கும் சிங்கள அரசியல்வாதிகளும் பௌத்த இனவாதிகளும்;; புத்தரின் பெயரால்; தமிழ்இமுஸ்லீம் சமூகங்களுக்கு இடையே நீண்டகாலமாக கட்டவிழ்த்து விடுகின்ற இன வன்முறைகள் காரணமாக பல்லாயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்தும் ஊனமுற்றவர்களாகவும் பலாயிரம் மில்லியன் அளவிலான சொத்துக்கள் அழிந்தும் உள்ளன. 

இவ்வாறான அனுபவங்களையும் பட்டறிவுகளையும் படிப்பினைகளையும் நேரில் பார்த்து அனுபவித்த தமிழ் அரசியல் தலைமைகள் புதிய அரசியல் யாப்பில் பௌத்த மதத்திற்கு முன்னுரிமை வழங்குவதில் தமக்கு எவ்வித ஆட்சேபனையும் இல்லை என்பதை தெரிவித்தது மட்டுமன்றி நல்லாட்சி அரசாங்கத்தின் நான்கு வரவு செலவுத்திட்டத்திற்கும் வடக்குஇகிழக்கில் ஆயிரம் விகாரைகளை புனரமைப்பதற்கு வரவு செலவுத்திட்டத்தின் ஊடாக நிதி ஒதுக்கீடு செய்வதற்கும் ஆதரவு அளித்தார்கள்

வடக்கு கிழக்கில் தொல்லியல் திணைக்களம்இவனப்பாதுகாப்பு திணைக்களம் மகாவலி அதிகாரசபை போன்ற திணைக்களங்கள் பௌத்த மயமாக்கலுக்கும் நில அபகரிப்புக்கும் அரசாங்கத்தின் நிகழ்சி நிரலின்படி அத்து மீறி தமிழர்களின் நிலங்களை திட்டமிட்டு சுவீகரித்து வருகின்றார்கள். அரசுக்கு நிபந்தனையற்ற ஆதரவு வழங்கிக்கொண்டு இருக்கக்கூடிய தமிழ்த்; தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் இவ்வாறன அத்துமீறல்களை கட்டுப்படுத்துவதற்கு பதிலாக அரசுக்கு ஆதரவை வழங்கிக் கொண்டிருந்ததனுடைய விளைவு தான் மீண்டும் ஒரு இன முறுகல் ஏற்படுத்துவதற்கு காரணமாக அமைந்திருக்கின்றது. 

மேற்குறிப்பிட்ட பிரச்சினைகள் யாவும் அரசியல் ரீதியாக அரசுக்கு நிபந்தனை வித்திது பேரம் பேசி தீர்வு காண்பது அவசியம். அதனூடாகவே இப் பிரச்சினைகளை கட்டுப்படுத்த முடியும் அதனை செய்ய முடியாவிட்டால் கூட்டமைப்பு அரசுக்கு வழங்கிவரும் சகல ஆதரவுகளையும் விலக்கி மக்களோடு மக்களாக நின்று ஜனநாயக ரீதியன போராட்டத்தில் பங்கெடுக்கவேண்டும்.அதை செய்யாமல் அரசாங்கத்தின் கம்பெரலியா நிதியை பெற்றுக்கொண்டு அடுத்துவரும் பாராளுமன்ற தேர்தலில் நீங்கள் வெற்றிபெறலாம் என்று நினைத்தால் தமிழ் மக்களிடம் இருந்து தக்க பதிலை தேர்தல் ஊடாக நீங்கள் காண்பது உறுதி.மக்களே தமிழ் அரசியலின் வேடதாரிகளை இனங்கண்டு சிந்தித்து செயற்படுங்கள்.

Post a Comment

0 Comments