ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறுவதற்கான வாய்ப்புக்கள் உள்ளதாக கொழும்பு ஆங்கில ஊடகமொன்று தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது
க.பொ.த சாதாரணதரப்பரீட்சை எதிர்வரும் டிசம்பர் மாதம் 2 ஆம் திகதியிலிருந்து 12 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித தேர்தல்கள் ஆணையாளருக்கு அறிவித்துள்ளார்.
ஜனாதிபதி தேர்தலுக்கான தயார்படுத்தல்களை தேர்தல்கள் ஆணையகம் மேற்கொண்டுவரும் நிலையில் பரீட்சை தொடர்பான அறிவிப்பு தேர்தல்கள் ஆணையாளருக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் எதிர்வரும் நவம்பர் 9 க்கும் டிசம்பர் 9 க்கும் இடைப்பட்ட திகதியில் ஜனாதிபதி தேர்தலை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. எனினும் இதுகுறித்து இறுதியான முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை.
தேர்தல் ஆணையகம்தான் தேர்தலுக்கான திகதியை தீர்மானிக்கும். எனினும் திகதியை நாம் இன்னமும் முடிவு செய்யவில்லை என தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
0 Comments