Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

மட்டக்களப்பில் திலீபன் நினைவேந்தல்!

தியாக தீபம் திலீபனின் 32 ஆவது ஆண்டு நினைவு தின நிகழ்வுகள் மட்டக்களப்பு மண்டூர் கணேசபுரம் கண்ணகி அம்மன் ஆலய முன்றலில் உணர்வு பூர்வமாக நடைபெற்றது.
ஜனநாயக போராளிகள் கட்சி மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு இணைந்து நடத்திய இந்த நிகழ்வில் தியாக தீபம் திலீபனின் உருவப்படத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினர்களான ஞா.சிறிநேசன் மற்றும் சீ.யோகேஸ்வரன் ஆகியோரினால் மலர் மாலை அணிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து நிகழ்வில் கலந்து கொண்டவர்களினால் ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.
இந்த நிகழ்வில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள், ஜனநாயக போராளிகள் கட்சி உறுப்பினர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments