Advertisement

Responsive Advertisement

26,27 திட்டமிட்டபடி போராட்டம் நடைபெறும்; வதந்திகளை நம்பவேண்டாம்!


26,27 ஆம் திகதிகளில் அதிபர், ஆசிரியர்களின் சுகயீன லீவு போராட்டம்  திட்டமிட்டபடி நடைபெறும் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்ராலின் தெரிவித்துள்ளார்.


இதேவேளை-


26,27ஆம் திகதிகளில் நடைபெறவுள்ள அதிபர்கள் ஆசிரியர்களின் சுகவீன லீவு  போரட்டத்திற்கு வடமாகாண புதிய அதிபர்கள் சங்கமும் ஆதரவு தெரிவித்துள்ளன.


சிலர் 'நடைபெறாது' என பொய்யான செய்திகளை பரப்பவும் - போராட்டத்தை குழப்பும் விதமாக செயற்படவும் முயல்வதாக தகவல் கிடைத்துள்ளன. 


குறித்த சங்கமொன்றை - போராட்டத்தில் இணையுமாறு எமது சங்க உறுப்பினர்கள் வாயிலாகவும் கோரிக்கை அவர்களுக்கு விடுத்திருந்தோம் - எவ்வித பதிலும் எமக்கு வழங்காமல் - தம்முடன் கலந்துரையாடப்படவில்லை என்ற பொய்யான செய்திகளை கூறி வடக்கு கிழக்கில் அதிபர் ஆசிரியர்களை குழப்ப முயல்கின்றது.


இலங்கையின் அனைத்து தொழிற்சங்கங்களும் இணைந்து அதிபர், ஆசிரியர்களின் உரிமைகளுக்காக போராட தயாராக உள்ள நிலையில் - 

வடக்கு கிழக்கு கல்வியமைச்சு தவிர்ந்த எந்த வாசற்படியையும் மிதிக்காத இவர்கள் - வடக்கு கிழக்கில் கூட ஆசிரியர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியாத இவர்கள் - தேசிய பாடசாலைகளுக்கான இடமாற்ற சபையில் கூட பங்குகொள்ள தகுதியற்ற இவர்கள் - மத்திய கல்வியமைச்சுக்கும் அரசுக்கும் அழுத்தம் கொடுக்கத் தகுதியுள்ளவர்களா? அவர்கள் தீர்வைப் பெற்றுத்தருவார்களா? என ஆசிரியர் அதிபர்கள் ஆழமாக சிந்திக்க வேண்டும்.


அவ்வாறான போலித்தனமானவர்களின் செய்திகளை நம்பவேண்டாம். எனவும் 26,27 ஆம் திகதிகளில் நடபெறவுள்ள சுகயீன லீவுப் போராட்டத்தில் அதிபர் ஆசிரியர்கள் தங்களின் உரிமைகளுக்காகப் போராடுமாறும் இலங்கை ஆசிரியர் சங்கம் அழைப்புவிடுக்கின்றது.

Post a Comment

0 Comments