Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

நடந்துமுடிந்த 5ம் தர புலமைப்பரிசில் வினாத்தாளில் சிக்கல்

தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சைக்கான வினாத்தாளில் பாடத்திட்டத்துடன் தொடர்புபடாத பல கேள்விகள் உள்ளடக்கப்பட்டுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் சுட்டிக் காட்டியுள்ளது.
அண்மையில் நடைபெற்ற ஐந்தாம் தர புலமைப் பரிசில் பரீட்சைக்கான வினாத்தாளில், பாடத்திட்டத்துடன் தொடர்புபடாத பல கேள்விகள் உள்ளடக்கப்பட்டிருந்ததாக இலங்கை ஆசிரியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
குறிப்பாக அந்த வினாத்தாளின் 6ஆவது கேள்வி, 3ஆம், 4ஆம் அல்லது 5ஆம் வகுப்பு பாடத்திட்டங்களில் உள்ளடக்கப்படாத விடயம் என்றும், அது 6ஆம் வகுப்பு கணிதபாடத்துடன் தொடர்புடையது என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
குறித்த பரீட்சையின் விடைத்தாள் திருத்தப் பணியின் போது இதுகுறித்து அவதானம் செலுத்துமாறும் கோரப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments