Home » » மட்டக்களப்பு மாநகர சபையின் 22ஆவது அமர்வு

மட்டக்களப்பு மாநகர சபையின் 22ஆவது அமர்வு

மட்டக்களப்பு மாநகரசபையின் வளங்களைக் கொண்டு கம்பரெலிய திட்டத்தின் ஊடாக பெறப்படும் நிதிகள் மக்கள் அதிகளவான பயனை பெற்றுக்கொள்ளும் வகையில் பணிகள் முன்னெடுக்கப்படுவதாக மட்டக்களப்பு மாநகர முதல்வர் தி.சரவணபவன் சுட்டிக்காட்டியுள்ளார்.
மட்டக்களப்பு மாநகர சபையின் 22ஆவது மக்கள் சபை அமர்வு மட்டக்களப்பு மாநகர முதல்வர் தி.சரவணபவன் தலைமையில் இன்று காலை நடைபெற்றுள்ளது. இதன்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, கடந்த காலத்தில் முன்னெடுக்கப்பட்டுவரும் திட்டங்கள் தொடர்பில் ஆராயப்பட்டதுடன் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படும் திட்டங்களுக்கும் சபையின் அனுமதிகள் பெறப்பட்டுள்ளன.

அத்துடன் மக்கள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகள் குறித்தும் இங்கு ஆராயப்பட்டதுடன் அதற்கான தீர்வுகளையும் பெற்றுக்கொள்வது குறித்து பிரதிநிதிகளினால் ஆலோசனைகள் முன்வைக்கப்பட்டன.
கம்பரெலிய திட்டத்தின் ஊடாக முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி திட்டங்கள் குறித்து பல்வேறு கருத்துகள் தெரிவிக்கப்பட்டதுடன் இது தொடர்பில் மாநகரசபை முதல்வரினால் விசேட கருத்துரைகளும் வழங்கப்பட்டன.

மட்டக்களப்பு மாநகர சபையின் வளங்களைக் கொண்டு கம்பரெலிய திட்டத்தின் ஊடாக பெறப்படும் நிதிகள் மக்கள் அதிகளவான பயனை பெற்றுக்கொள்ளும் வகையில் பணிகள் முன்னெடுக்கப்படுவதாக இங்கு மாநகர முதல்வரினால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதன்போது, மாநகரசபையின் நிதிக்குழு மற்றும் வேலைகள் குழுக்களுக்கு புதிய உறுப்பினர்களை நியமிப்பதற்காக வாக்கெடுப்பு கோரப்பட்டுள்ளது. நடத்தப்பட்ட வாக்கெடுப்பின் அடிப்படையில் வேலுப்பிள்ளை தங்கேஸ்வர நிதிக்குழுவுக்கும், சீ.ஜெயந்திரகுமார் வேலைகள் குழுவுக்கும் வாக்கெடுப்பின் அடிப்படையில் தெரிவுசெய்யப்பட்டனர்.
இன்றைய அமர்வின்போது, விசேடமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள வறட்சி காரணமாக மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட திருப்பெருந்துறை உட்பட சில பகுதிகள் பாதிக்கப்பட்டதுள்ளது தொடர்பில் அப்பகுதி உறுப்பினர்களினால் சபையின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது.

இதன்போது, எதிர்காலத்தில் குடிநீர் பிரச்சினையை தீர்க்கும் வகையில் அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் கவனத்திற்கு கொண்டு சென்று தீர்வினைப் பெற்றுக்கொள்ளும் அதேவேளையில் மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பகுதிகளில் சுத்தமான குடிநீரைப் பெற்றுக்கொள்ளக்கூடிய கிணறுகளை இனங்கண்டு அவற்றில் இருந்தும் மாநகரசபையினால் குடிநீரைப் பெற்றுக்கொடுப்பதான நடவடிக்கையினை மேற்கொள்வது எனவும் தீர்மானிக்கப்பட்டது.
குறிப்பாக திருப்பெருந்துறை பகுதியில் மட்டக்களப்பில் சேகரிக்கப்படும் குப்பைகள் கொட்டப்படுவதன் காரணமாக அப்பகுதியில் உள்ள பல கிணறுகளின் நீரை பயன்படுத்தமுடியாத நிலையிலும் வறட்சியினால் குடிநீரைப் பெற்றுக்கொள்ளமுடியாத நிலையிலும் பிரதேசமக்கள் பெரும் காணப்படுவதுடன் அன்றாட தேவைகளுக்கும் நீரைப் பெற்றுக்கொள்ளமுடியாத நிலை காணப்படுவதாகவும் அப்பகுதி உறுப்பினர்களினால் இங்கு சுட்டிக்காட்டப்பட்டது.
மட்டக்களப்பு மாநாகரசபைக்குட்பட்ட பொதுமக்களின் உதவியுடன் நீரைப்பெற்றுக்கொள்ளும் வகையில் உள்ள கிணறுகளை தூய்மைப்படுத்தி, நீர் பாவனைக்கு தேவையான இடங்களில் குடிநீர் பயன்படுத்தக்கூடிய நீர் விநியோகம் செய்ய நடவடிக்கையெடுக்கப்படும் எனவும் அதற்கு பொதுமக்கள் தமது ஆதரவினை வழங்க வேண்டும் எனவும் இதன்போது மாநகர முதல்வர் கோரிக்கை விடுத்துள்ளார்.



Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |