Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்துக்கு அதிகார பூர்வமாக கணக்காளர் நியமனம் கூட்டமைப்பு முயற்சி வெற்றி!

கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தரம் உயர்தல் தொடர்பாக முதல் கட்டமான சிக்கல் நிலைக்கு முற்றுப் புள்ளி வைக்கப்பட்டுள்ளது. இதுவரை கணக்காளர் நியமனத்தில் இருந்த முரன்பாடு தீர்க்கப்பட்டு முழு அதிகாரம் கொண்ட கணக்காளர் ஒருவரை நியமிக்க திறைசேரி செயலாளர் அனுமதி வழங்கப்பட்டு இன்று 11/07/2019  மாலை 6, மணிக்கு பொதுநிர்வாக அமைச்சின் செயலாளர் அனுமதியுடன் உத்தியோக பூர்வ நியமனக்கடிதம் வழங்கப்பட்டுள்ளதாஎ அறியமுடிகிறது.
தமிழ்தேசிய கூட்டமைப்பு மேற்கொண்ட தொடர் அழுத்தம் காரணமாகவே பிரதமர் ரணிலுடனான சந்திப்பின் பின் இந்த விடயம் கைகூடியுள்ளது.
அடுத்த கட்ட நடவடிக்கையாக பிரதேச செயலக எல்லை நிர்ணயம் மிக விரைவில் மேற்கொள்ளப்பட்டு பூரண அதிகாரம் கொண்ட முழுமையான பிரதேச செயலகமாக கல்முனை வடக்கு பிரதேச செயலகம் செயல்படும் என தமிழ்தேசிய கூட்டமைப்பு  நம்பிக்கை தெரிவித்துள்ளது.
இன்று இடம்பெற்ற அரசுக்கு எதிரான நம்பிக்கை இல்லா பிரேரணையின்போது கணக்காளர் நியமனம் சம்மந்தமான உத்தியோக பூர்வ கடிதம் வழங்கப்பட்டமையால் தமிழ்தேசியகூட்டமைப்பு அரசாங்கத்துக்கு சார்பாக வாக்களித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments