Home » » யாழில் இயங்கி வந்த பாலியல் விடுதியொன்று முற்றுகை

யாழில் இயங்கி வந்த பாலியல் விடுதியொன்று முற்றுகை

அலைபேசி வலையமைப்பு நிறுவனத்தின் போர்வையில் உடுவில் கிழக்கு கிராம அலுவலகரின் காரியாலயம் இயங்கும் வீட்டில் பாலியல் தொழில் புரியும் விடுதியொன்று இயங்கி வருவதாக கண்டறியப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் இன்று முற்பகல் உடுவில் அம்பலவாணர் வீதியில் இடம்பெற்றுள்ளது.
குறித்த வீட்டில் தென்னிலங்கையைச் சேர்ந்த 2 பெண்கள் உட்பட நால்வர், இளம் பெண் ஒருவரைக் கடத்த முற்பட்டுள்ளனர்.
இது தொடர்பில் அந்த இளம் பெண் வழங்கிய தகவலின் அடிப்படையில் சுன்னாகம் பொலிஸார், ஒருவரைக் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்போது மேலும் 2 பெண்கள் உட்பட மூவர் தப்பிச்சென்றுள்ளனர்.
இது குறித்து மேலும் தெரியவருவதாவது,
உடுவில் கிழக்கு (184) கிராம அலுவலர் அலுவலகம் இயங்கும் வீட்டில் கடந்த ஒரு மாத காலமாக அலைபேசி வலையமைப்பு நிறுவனத்தின் பெயர்ப்பலகையுடன் அலுவலகம் ஒன்று இயங்கிவந்துள்ளது.
இதன்போது நுகேகொட மற்றும் மட்டக்களப்பைச் சேர்ந்த 2 இளைஞர்கள் உட்பட 2 இளம் பெண்கள் தங்கியிருந்துள்ளனர்.அத்துடன், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பெண்களும் அங்கு அழைத்துவரப்பட்டுள்ளனர். அவர்களின் நடவடிக்கையை ஆராய்ந்த உடுவில் கிழக்கு பெண் கிராம அலுவலகர் அங்கிருந்தவர்களிடம் நிறுவனம் தொடர்பான பதிவைக் கேட்டுக்கொண்டுள்ளார்.
சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் இது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன்,இது தொடர்பில் நுகேகொடையைச் சேர்ந்த ஒருவரை கைது செய்துள்ளதாகவும் சுன்னாகம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து வலி.தெற்கு பிரதேச சபை உறுப்பினர் தவராஜா துவாரகன், உடுவில் பிரதேச செயலர், உடுவில் கிழக்கு கிராம அலுவலகர், பொதுமக்கள் என பலர் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் குழுமியுள்ளதுடன், இது தொடர்பில் அந்த வீட்டின் உரிமையாளர் உட்பட அனைவரையும் கைது செய்யவேண்டுமெனவும் சுன்னாகம் பொலிஸாரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |