Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

மீண்டும் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ள ஹிஸ்புல்லாஹ்


முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லாவிடம் விசாரணைகளை மேற்கொள்ள மீண்டும் வருமாறு நாடாளுமன்ற தெரிவுக்குழு அழைப்பு விடுத்துள்ளது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக ஆராயும் நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் முன்னிலையில் பலர் சாட்சியம் அளித்துள்ளது.
இலங்கை தவ்ஹித் ஜமாத் அமைப்பின் பொதுச் செயலாளர் அப்துல் ராசிக் உட்பட அந்த அமைப்பின் பிரதிநிதிகள் நேற்று சாட்சியம் அளித்தனர்.
தெரிவுக்குழுவின் தலைவர் பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறியின் தலைமையில் நேற்று பிற்பகல் 2.30 மணியளவில் தெரிவு குழு ஆரம்பமாகியது.
அப்துல் ராசிக் முதலாவதாக சாட்சி வழங்கியிருந்தார். இதன்போது குழுவின் உறுப்பினரான நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம், இனவாத பிரச்சாரம் செய்வதற்கு தெரிவு குழுவை பயன்படுத்திக்கொள்ள வேண்டாம் என குறிப்பிட்டார்.
இதேவேளை, அந்த அமைப்புகளின் உறுப்பினர்கள் வெளியிட்ட தகவல்களுக்கமைய ஹிஸ்புல்லாவிடம் மீண்டும் விசாரணைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
ஏற்கனவே தெரிவுக்குழுவின் முன்னிலையில் ஆஜரான ஹிஸ்புல்லா உயிர்த்த ஞாயிறு தற்கொலை தாக்குதல்கள் தொடர்பான பல்வேறு தகவல்களை வெளியிட்டிருந்தார்.

Post a Comment

0 Comments