Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

கல்முனையில் திடீர் பதற்றம்! சுமந்திரன் உட்பட அரசியல் பிரமுகர்கள் மீது தாக்குதல் முயற்சி?


பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் தகவல்களை தெரிவிக்க கல்முனை சென்றிருந்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் உட்பட்ட சிலர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிரதமரின் செய்தியை தாங்கி கற்பிட்டிமுனை சென்ற கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன், அமைச்சர் மனோ கணேசன், தயாகமகே ஆகியோர் பலத்த பாதுகாப்புடன் போராட்ட களத்தை சென்றடைந்தனர்.
இதன்போது, பிரதமரின் செய்தியினை சுமந்திரன் வாசித்துக் காட்டியதாகவும், இதன்போது, சுமூகமாக இருந்த நிலை அமைச்சர் தயாகமகே பேசியதன் பின்னர் முறுகல் நிலையடைந்ததாகவும், இதனையடுத்தே நாடாளுமன்ற உறுப்பினர் உட்பட கூட்டமைப்பின் உறுப்பினர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன.
நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், நாடாளுமன்ற உறுப்பினர் க.கோடீஸ்வரன் ஆகியோருடன் அதிகாரிகளும் இதன்போது கலந்துகொண்டு உண்ணாவிரத போராட்டகாரர்களுடன் கலந்துரையாடினார்கள்.
அப்போது உள்நாட்டு அமைச்சரின் வாக்குறுதி வாசிக்கப்பட்ட போது தமிழ் மக்கள் கடுமையாக கொந்தளித்து தமது எதிர்ப்பை கூச்சலிட்டு வெளியிட்டதாகவும், தொடர்ந்தும் போராட்டக்காரர்களை சமாதானபடுத்த எடுத்த சகலமுயற்சிகளும் தோல்வியடைந்த நிலையில் மக்களால் அரசியல்வாதிகள் அங்கிருந்து வெளியேறுமாறு கோரிக்கை விடுத்தனர் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, ஆத்திரமடைந்த மக்கள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் உட்பட அனைவரையும் நோக்கி தாக்குதலை மேற்கொள்ள ஆரம்பித்தனர். பொலிஸாரும், விசேட அதிரடி படையினரும் தலையிட்டு அவர்களை பாதுகாப்பாக அங்கிருந்து அகற்றினர் என அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Post a Comment

0 Comments