Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

கல்முனை செல்கின்றார் ஞானசாரர்! என்ன நடக்கப்போகின்றது?

பொதுபல சேனாவின் பொதுச்செயலாளர் கலபொட அத்தே ஞானசார தேரர் சனிக்கிழமை கல்முனைக்கு செல்ல உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவர் கல்முனையில் நடக்கும் உண்ணாவிரத போராட்டத்தில் கலந்துகொள்ள உள்ளதாக ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
கடந்த மூன்று நாட்களுக்கு முன்னர் அவர் அங்கு செல்லவிருப்பதாக தகவல் வெளியிடப்பட்ட நிலையில் நாளை சனிக்கிழமை அவர் அங்கு செல்வதாக தெரிவிக்கப்படுகின்றது.
ரத்ன தேரரின் உண்ணாவிரத போராட்டத்தில் கலந்துகொண்ட அவர் கூறிய சில கருத்துக்களால் கடும் அச்ச சூழல் ஏற்பட்டிருந்த அதேவேளை முஸ்லிம் அரசியல் வாதிகளும் பதவி விலகியிருந்தனர்.
இந்த நிலையில் கல்முனையில் உண்ணாவிரதமிருக்கும் தேரர் உள்ளிட்ட இந்து மதகுருமாரை சந்திக்க இவர் செல்ல உள்ளதால் அங்கு என்ன நடக்குமோ என்ற எண்ணம் எழுந்துள்ளது.
இதேவேளை போராட்ட இடத்திற்கு சென்ற அரசியல்வாதிகளை ஓட ஓட விரட்டிய போராட்டக்காரர்கள் ஞானசார தேரரை வரவேற்பார்கள் என்றும் குறிப்பிடப்படுகின்றது.

Post a Comment

0 Comments