Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

கூட்டமைப்பும் சமுர்த்தி பயனாளிகள் தெரிவும்



மன்னார் மாவட்டத்தில் 2019ம் ஆண்டுக்கான சமுர்த்தி பயனாளிகளுக்கு சமுர்த்தி நிவாரண உரித்துப்படிவம்; வழங்கப்படவுள்ள நிலையில் இப் பயனாளிகள் தெரிவானது சமுர்த்தி உத்தியோகத்தர் மூலம் தெரிவு செய்யப்பட்டு பிரதேச செயலாளரால்  கைத்தொழில் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சுக்கு அனுமதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

ஆனால் பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன்  ஆரம்ப கைத்தொழில் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சில் சமுர்த்தி நிவாரண பயனாளிகள் அனுமதி வழங்கப்பட்ட பட்டியலை எடுத்து வந்து  தனது  போலி அரசியல் முகவர் மூலம் மன்னார் மாவட்டத்தில் பதிவுகளை மேற் கொண்டு வருகின்றார்.

 இவ்விடயமானது மக்களை ஏமாற்றி தனது வாக்கு வங்கியினை அதிகரிக்க செய்யும் செயலாகவே இச் செயல் அமைகின்றது.மேலும் மன்னார் மாவட்டம் மட்டுமன்றி வடக்கின் ஏனைய மாவட்டங்களிலும் இவ்வாறான செயற்பாடுகளை தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களால் அரங்கேற்றப்படுகின்றது. ஆகவே மக்கள் இனிவரும் காலங்களிலாவது இவ்வாறான போலி அரசியல்வாதிகளிடம் இருந்து எச்சரிக்கையாக இருங்கள்.

Post a Comment

0 Comments