யதாக குற்றச்சாட்டுகளுக்கு இலக்காகியுள்ள அமைச்சர் ரிசாட் பதியூதீன் மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் ஆகியோர் உண்மையில் நிரபராதிகள் என்றால் அவர்கள் முதலில் தாங்களாகவே பதவிகளில் இருந்து விலகி விசாரணைகளுக்கு முகம்கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணத்தில் ஊடகவியலாளர்கள் சந்திப்பொன்றை நடத்தி இந்தக் கோரிக்கையை முன்வைத்திருக்கும் ஈ.பீ.ஆர்.எல்.எப் கட்சியின் தலைவர் சுரேஷ் பிறேமச்சந்திரன், நாட்டின் அரச தலைவரான ஜனாதிபதியும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் குறுகிய அரசியல் லாபங்களைக் கருதி செயற்படாது மக்களுக்கு உண்மையை வெளிப்படுத்த உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.
0 comments: