Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

வவுனியா நகரசபை குப்பை அகற்றும் இயந்திரத்திற்குள் வெடிமருந்து! தீவிர விசாரணையில் பொலிஸார்!

வவுனியா நகரசபை வளாகத்தில் இருந்து கல் உடைப்பதற்கு பயன்படும் வெடிமருந்து இன்றைய தினம் மீட்கபட்டுள்ளது.
வவுனியா நகரசபை வளாகத்தில் பழுதடைந்த நிலையில் நிறுத்திவைக்கபட்டிருந்த குப்பை அகற்றும் இயந்திரத்தை பழுது பார்ப்பதற்காக நகரசபை உத்தியோகத்தர்கள் இன்றய தினம் சுத்தப்படுத்தியுள்ளனர்.
இதன்போது கல் உடைப்பதற்கு பயன்படும் வெடிமருந்தும் அதற்கு பயன்படுத்தப்படும் வயர்களும், மூன்று பேரின் தேசியஅடையாள அட்டைகளும் அதனுள் காணப்பட்டுள்ளதையடுத்து இவ்விடயம் தொடர்பாக நகரசபை உத்தியோகத்தர்களால் வவுனியா பொலிசாருக்கு தெரியபடுத்தபட்டது.
சம்பவ இடத்திற்கு விரைந்த வவுனியா பொலிசார் விசேட அதிரடிப்படையினரின் உதவியுடன் வெடிமருந்து மற்றும் அடையாள அட்டைகளை மீட்டுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பான தீவிர விசாரணைகள் வவுனியா பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.



















Post a Comment

0 Comments