Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

மட்டக்களப்பு சீயோன் தேவாலய குண்டு வெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்காக ஆத்ம சாந்தி பூஜை

உயிர்த்த ஞாயிறு தினத்தில் மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவத்தில் உயிழந்த உறவுகளுக்காக திருப்பலி, ஆத்மாசாந்திப் பூசை என்பன நடத்தப்படவுள்ளன.
இந்த விடயத்தை கிழக்கு தமிழர் ஒன்றியத்தின் தலைவரும், சட்டத்தரணியுமான த.சிவநாதன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,
மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் உயிர்த்த ஞாயிறு தினத்தன்று உயிரிழந்த உறவுகளுக்கு கிழக்கு தமிழர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் நாளை காலை 10 மணியளவில் மட்டக்களப்பு புனித மரியாள் இணை பேராலயத்தில் 31ஆம் நாள் அஞ்சலியும், ஆத்ம சாந்தி திருப்பலிப் பூசை நடப்படவுள்ளன.
அதனை தொடர்ந்து அன்றைய தினம் நண்பகல் 12 மணியளவில் மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் ஆத்ம சாந்தி பூசையும் நடைபெறவுள்ளது.
அதன்பின்னர் உறவுகளுக்காக அன்னதானம் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. எனவே இதில் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு கோருகின்றோம் என தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments