Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

தற்கொலை குண்டுத்தாக்குதலின் பின்னணியில் முக்கிய அரசியல்வாதிகள்! விசாரணையில் வெளிவரும் அதிர்ச்சித் தகவல்கள்


கொழும்பில் தற்கொலை தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளுக்கும் கிழக்கு மாகாணம் மற்றும் கண்டி மாவட்டதை சேர்ந்த அரசியல்வாதிக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
குண்டுத்தாக்குதலை நடத்திய தீவிரவாதிகளிடமிருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட தகவல்களுக்கு அமைய இது உறுதி செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என கைது செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டவர்களிடம் பெறப்பட்ட ஆதாரங்கள், புகைப்படங்கள் மூலம் பல ரகசியங்கள் அம்பலமாகி உள்ளன.
இதன்படி கிழக்கை பிரதித்துவம் செய்யும் அரசியல்வாதியும் கண்டி மாவட்டத்தை பிரதிதித்துவம் செய்யும் முக்கிய அரசியல்வாதிக்கும் தீவிரவாதிகளுக்கும் நெருக்கிய தொடர்பு உள்ளதாக தெரிய வருகிறது.
குறித்த இருவரின் வீட்டில் தற்போது தீவிர சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பாதுகாப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் பல அரசியல்வாதிகளுக்கும் இந்தத் தீவிரவாதிகளுக்கும் தொடர்பு இருக்கக் கூடும் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
தற்கொலை தாக்குதல் நடத்திய தேசிய தவ்ஹித் ஜமாத் அமைப்புக்கும் கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லாவுக்கும் இடையில் தொடர்புகள் இருக்க வாய்ப்புள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

இந்த அமைப்புக்கும் அரசியல்வாதிகள் மற்றும் பாதுகாப்பு தரப்பினருக்கும் இடையில் இருக்கும் தொடர்புகள் குறித்து விசாரிக்கப்பட வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்திருந்தார்.
இன்றையதினம் கூடிய நாடாளுமன்ற அமர்வில் நாடாளுமன்ற இந்தத் தகவலை வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments