Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

பொலிஸ் மா அதிபர், பாதுகாப்பு செயலாளர் ஆகியோரை பதவி விலகுமாறு அறிவிப்பு


பாதுகாப்பு செயலாளரான ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோரை பதவி விலகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளதாக சிங்கள இணைய தளமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இந்தப் பதவிகளுக்காக புதிதாக இரண்டு பேரின் பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நேற்றைய தினம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உரையாற்றிய போது 24 மணித்தியாலங்களில் பாதுகாப்பு தலைமை பதவிகளில் மாற்றம் செய்வதாக தெரிவித்திருந்தார்.

இதேவேளை, பாதுகாப்பு செயலாளர் ஏற்கனவே தனது பதவியை ராஜினாமா செய்வதற்கான கடிதத்தை ஒப்படைத்து உள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகிறது.

Post a Comment

0 Comments