Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

அதிக ஒலியெழுப்பும் வாகனங்கள் தொடர்பாக நடவடிக்கையெடுக்க தீர்மானம்


அதிக சத்தத்தை ஏற்படுத்தும் ஒலி எழுப்பிகளுடனான (ஹோர்ன்) வாகனங்கள் தொடர்பாக நடவடிக்கையெடுக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொலிஸ் மா அதிபருக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

போக்குவரத்து சட்டங்களை மீறுதல் மற்றும் 105 டெசிபல் மீட்டரை விட அதிக சத்தத்துடன் ஒலி எழுப்புதல் தொடர்பில் தேவையான சட்ட நடவடிக்கைகளை எடுக்க நாட்டிலுள்ள அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் அறிவிக்குமாறு ஜனாதிபதி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். -(3)

Post a Comment

0 Comments