இயற்கை வாயு மற்றும் பெற்றோலியப் பொருட்களை ஸ்ரீலங்காவில் விரைவில் பெற்றுக்கொள்ள முடியும் என்ற நம்பிக்கையை மன்னாரின் அகழ்வு பணிகள் வழங்கியுள்ளதாக பெற்றோலிய வள அபிவிருத்தி அமைச்சர் கபீர் ஹாசிம் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற குழுநிலை விவாதத்தில் உரையாற்றும்போதே அமைச்சர் இவ்வாறு கூறியுள்ளார்.
12 நிறுவனங்கள் இதற்கான செயற்பாடுகளில் முதலீடுகளை மேற்கொள்ள முன்வந்துள்ளதுடன் 2020 இல் உற்பத்தி தொடர்பான உடன்படிக்கை கைச்சாத்தாகும் எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எரிபொருள் மற்றும் எரிவாயு என்பவற்றை உற்பத்தி செய்யும் நாடாக ஸ்ரீலங்காவை வெகுவிரைவில் உருவாக்க முடியுமென்றும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
0 Comments