Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

இனங்களுக்கிடையில் பரஸ்பர ஒற்றுமையையும் புரிந்துணர்வையும் ஏற்படுத்தும் நிகழ்வு

( எம்.ஐ.எம்.அஸ்ஹர்)
இனங்களுக்கிடையில் பரஸ்பர ஒற்றுமையையும் புரிந்துணர்வையும் ஏற்படுத்தும் வகையில் சாய்ந்தமருது லீடர் எம்.எச்.எம்.அஸ்றப் வித்தியாலய அதிபர் எம்.ஐ.எம்.இல்யாஸ் அவர்களின் ஆலோசனையின் பேரில் தரம் 3 பொறுப்பாசிரியர்களான ரீ.ஏ.றாசிக் மற்றும் ஏ.பரீன் உம்மா ஆகியோரின் நெறிப்படுத்தலில்  தரம் 3 மாணவர்களால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த  ” நாம் இலங்கையர் ” எனும் தொனிப்பொருளினாலான சர்வ மதத்தையும் அவர்களின் கலாசார விழிமியங்களையும் ,உணவு பரிமாற்ற முறையையும் பிரதிபலிக்கும் வகையில் அமைந்த நிகழ்வொன்று அண்மையில் பாடசாலையில் இடம்பெற்றது.

பாடசாலை மாணவர்களிடமிருந்தே இன ஒற்றுமையும்  மதங்களுக்கிடையிலான புரிந்துணர்வும் ஏனைய மதத்தைச் சேர்ந்தவர்களையும் அவர்களது கலை கலாசார நிகழ்வுகளையும் மதிப்பதோடு அவற்றிற்கு மரியாதை செலுத்தும் பண்புகளை கற்றுக் கொடுக்கும் பணியினை ஆசிரியர்கள் செயற்படுத்த வேண்டும். அப்போதுதான் எதிர்காலத்தில் ஏனைய சமூகத்தினரை சந்தேகக் கண் கொண்டு பாராமல் இன வன்முறையற்ற சமூகமொன்றினை உருவாக்க வழிவகுக்கும் என பாடசாலை அதிபர் எம்.ஐ.எம்.இல்யாஸ் தெரிவித்தார்.

Post a Comment

0 Comments