Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

சீனாவும் இலங்கைக்கு ரயில் வழங்கவுள்ளது!

சீன தூதுவர் Cheng Xueyuan கண்டி மல்வத்து மற்றும் அஸ்கிரிய பீட நாயக்க தேரர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இந்த நிகழ்வு நேற்று இடம்பெற்றது. இதன்போது சீன அபிவிருத்தியை நோக்கி செல்லும் ரயில் ஒன்றை இலங்கைக்காக ஒதுக்கீடு செய்வதாக அவர் தெரிவித்தார்.
இலங்கையின் அபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்கு சீனா எப்போதும் ஒத்துழைப்பு வழங்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையில் தூதரக தொடர்புகள் ஆரம்பிக்கப்பட்டு 62 வருடங்கள் பூர்த்தி அடைகின்றன. இதனை முன்னிட்டு சீன தூதுவர் மல்வத்து மற்றும் அஸ்கிரிய பீடங்களின் மகாநாயக்க தேரர்களை சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Post a Comment

0 Comments