முதல் காலாண்டுக்காக ஒதுக்கப்பட்ட நிதியில் பாதுகாப்பு அமைச்சுக்காக ஆயிரத்து 124 கோடியே 63 இலட்சடத்து 55 ஆயிரம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
புதிய அரசின் 2019 ஆம் ஆண்டின் ஏப்ரல் 30 ஆம் திகதி வரையிலுமான முதல் காலாண்டுக்கான இடைக்கால கணக்கறிக்கையை நிதியமைச்சர் மங்கள சமரவீரவினால் இன்று சபையில் சமர்ப்பித்ததுடன் விவாதம் இடம்பெற்றதுடன் வாக்கெடுப்புக்கு விடப்பட்டதுடன் 102 வாக்குகளை பெற்று 96 மேலதிக வாக்குகளினால் நிறைவேற்றப்பட்டது.
இவ் இடைக்கால கணக்கறிக்கையில், அடுத்த ஆண்டின் முதல் நான்கு மாதங்களுக்காக 1765 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் சேவைகளுக்காக 790 பில்லியன் ரூபாவும், திரட்டு நிதியத்துக்காக 970 பில்லின் ரூபாவும், முற்பணங்களுக்காக 5 பில்லியன் ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளன. அத்துடன் மேற்குறிப்பிட்ட காலப்பகுதியில் 990 பில்லியன் கடன் பெறவும் எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
பாராளுமன்றம் வெள்ளிக்கிழமை (21-12-2018) காலை 10:30க்கு சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் கூடியது. இதனையடுத்து சபாநாயகர் அறிவிப்பும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் உறையும் இடம்பெற்றது. பின்னர் நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர 2019 ஆம் ஆண்டில் முதல் காலாண்டுக்கான இடைக்கால கணக்கறிக்கையை சபையில் சமர்ப்பித்து, பாராளுமன்றத்தின் அங்கீகாரத்தை கோரினார்.
முதல் காலாண்டுக்காக ஒதுக்கப்பட்ட 1765,523,826,000 ரூபா நிதியில், பாதுகாப்பு அமைச்சுக்காக ஆயிரத்து 124 கோடியே 63 இலட்சடத்து 55 ஆயிரம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதுடன், ஜனாதிபதி செயலகத்துக்கு 439 கோடியே 62 இலட்சத்து 80 ஆயிரம் ரூபாவும், பிரதமர் அலுவலகத்துக்கு 50 கோடியே 39 இலட்சத்து 70 ஆயிரம் ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளது.
0 Comments