Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

சபாநாயகர் அலுவலகத்தின் அவசர அறிவிப்பு!

சிறிலங்கா நாடாளுமன்றில் இன்று இடம்பெற்ற கைலப்புக்களை அடுத்து ஒத்திவைக்கப்பட்ட நாடாளுமன்றம் நாளைய தினம் பிற்பகல் 1.30 க்கு கூடவுள்ளது.
சிறிலங்கா அரச தலைவரினால் அதிரடியாக பிரதமராக நியமிக்கப்பட்ட மஹிந்த ராஜபக்சவின் விசுவாசிகளான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் சபாநாயகர் கரு ஜயசூரியவை சுற்றிவளைத்து தாக்க முற்பட்டதை அடுத்து இன்றைய தினம் நாடாளுமன்ற அமர்வு ஒத்திவைக்கப்பட்டது.
இதனையடுத்து உடனடியாக விசேட அதிரடிப்படை பொலிசாரின் பாதுகாப்புக்கு உத்தரவிட்ட சபாநாயகர் கரு ஜயசூரிய கட்சித் தலைவர்களின் கூட்டத்திற்கும் அழைப்பு விடுத்தார். இதன் போதே நீண்ட வாக்குவாதங்களுக்குப் பின்னர் நவம்பர் 16 ஆம் திகதியான நாளைய தினம் பிற்பகல் 1.30 க்கு நாடாளுமன்றத்தை கூட்டுவது என்ற தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments