Home » » கிழக்கு மாகாணத்தில் சமூக இணக்கப்பாட்டை ஏற்படுத்தும் மூவின மாணவர்களும் ஒன்றுகூடும் ” சகோதர சங்கமம் ” நிகழ்ச்சி

கிழக்கு மாகாணத்தில் சமூக இணக்கப்பாட்டை ஏற்படுத்தும் மூவின மாணவர்களும் ஒன்றுகூடும் ” சகோதர சங்கமம் ” நிகழ்ச்சி

(எம்.ஐ.எம்.அஸ்ஹர்)
இனங்களுக்கடையில் நல்லுறவையும் பரஸ்பர ஒற்றுமையையும் சமாதானத்தையும் ஏற்படுத்தும் வகையில் கிழக்கு மாகாண கல்வித்திணைக்களம்  ஜீ.ரீ.இஸட்டின் சமூக இசைவுக்கான கல்விப் பிரிவினூடாக மாணவர் உறவுப் பரிமாற்ற திட்டத்திற்கு இசைவாக ஒழுங்கு செய்துள்ள மூவின மாணவர்களும் ஒன்றுகூடும் ” சகோதர சங்கமம் ” நிகழ்ச்சி எதிர்வரும் 26 வெள்ளிக்கிழமை மாலை முதல் 29 ஆம் திகதி திங்கட் கிழமை காலை வரை பட்டிருப்பு மத்திய மகா வித்தியாலயம் ( தேசிய பாடசாலை ) களுவாஞ்சிகுடியில் இடம்பெறவுள்ளது.
இந்நிகழ்வில் மருதமுனை அல் மனார் மத்திய கல்லூரி , மருதமுனை ஸம்ஸ் மத்தியகல்லூரி ஆகியவற்றிலிருந்து முஸ்லிம் மாணவ மாணவிகளும் , பட்டிருப்பு மத்திய மகா வித்தியாலயம் ( தேசிய பாடசாலை ) களுவாஞ்சிகுடியில் இருந்து  இந்து ,  கிருஸ்தவ மாணவ மாணவிகளும்  அம்பாறை சேனாகம மகா வித்தியாலயத்திலிலுருந்து சிங்கள மாணவ மாணவிகளும் ஆசிரியர்களும் பங்கேற்கவுள்ளனர்.
பல்லின சமூகத்தைக் கொண்ட எமது நாட்டில் ஒவ்வொருவரும் தாம் சார்ந்த இன , மத , மொழி , கலை , கலாசார அம்சங்களில் பற்றுவைத்து பெருமிதம் கொள்ளும் அதே வேளை மற்றையோரின் இன , மத , மொழி , கலை , கலாசார அம்சங்களை அறிவதுடன் அவற்றை மதிக்கவும் பழகிக்கொள்ள வேண்டும்  என்ற எண்ணக்கருவை பாடசாலை மாணவர்களிடையே விருத்தி செய்து நாட்டின் சமூக  இணக்கப்பாட்டை ஏற்படுத்தும் வகையில் இந்த நிகழ்வு ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |