வெளிநாட்டு தூதுவர் ஒருவர் நாய் கடிக்கு உள்ளான நிலையில் தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வீதியில் ஓட்டப் பயிற்சியில் ஈடுபட்ட வெளிநாட்டுத் தூதுவரை, நாய் ஒன்று துரத்தித் துரத்திக் கடித்துள்ளது. இதன்காரணமாக அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
|
கடந்த வாரம் கூட்டு எதிர்க்கட்சியினர் முன்னெடுத்த எதிர்ப்பு பேரணி கொழும்பில் நடைபெற்றது. அன்றைய தினம் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.இந்த தூதுவர் காலை வேளையில் உடற்பயிற்சிக்காக ஓடும் வீதியை ஆர்ப்பாட்டக்காரர்கள் தடை செய்துள்ளனர். இதன்காரணமாக வேறு வீதியில் அவர் ஓடியுள்ளார். இதன் போதே அவர் நாய்க் கடிக்கு உள்ளாகி உள்ளார். தனியார் வைத்தியசாலை ஒன்றில் அவர் சிகிச்சை பெற்றுள்ளார்.
|
0 Comments