Advertisement

Responsive Advertisement

இலங்கை அணிக்கு தீர்மானம் மிக்க போட்டி இன்று


ஆசிய கிண்ணத்திற்கான போட்டி தொடரில் இன்றைய தினம் தீர்மானம் மிக்க போட்டியில் இலங்கை அணி விளையாடவுள்ளது.

இன்றைய தினம் தமது இரண்டாவது போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியுடன் இலங்கை அணி மோதவுள்ளது.

இந்த தொடரில் அடுத்தச் சுற்றுக்கு செல்ல வேண்டுமென்றால் இன்றைய போட்டியில் கட்டாயமாக வெற்றிப் பெற வேண்டுமென்ற நிலைமையிலேயே இலங்கை அணி இருக்கின்றது. இதனால் பெரும் எதிர்பார்ப்புகளுடன் இலங்கை அணி ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

ஏற்கனவே நேற்று முன்தினம் பங்களாதேஷ் அணியுடன் நடைபெற்ற முதலாவது போட்டியில் இலங்கை அணி படுதோல்வியை பெற்றுக்கொண்டிருந்தது. இதனால் இன்றைய தினம் நடைபெறவுள்ள போட்டியில் வெற்றிப் பெற்றால் மாத்திரதே அடுத்த சுற்றில் விளையாட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. -(3)

Post a Comment

0 Comments