Advertisement

Responsive Advertisement

சவளக்கடை விநாயகர்வித்தியாலயத்திற்கு அருகில் பேருந்துடன் மோட்டார் சைக்கில் மோதியதில் கணவர் மரணம் !! மனைவி படுகாயம் !!!

நாவிதன்வெளி சவளக்கடைப் பொலிஸ்பிரிவுக்குட்பட்ட சவளக்கடை விநாயகர்வித்தியாலயத்திற்கு அருகில் பேருந்துடன் மோட்டார் சைக்கில் மோதியதில் மண்டூர் பிரதேசப் பாடசாலையில் கற்பிக்கும் ஆசிரியர் ஒருவர் ஸ்தலத்தில் உயிரழந்ததுடன் அவரது மனைவி ஆசிரியை படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாக சவளக்கடைப் பொலிஸார் தெரிவித்தனர்.



இது தொடர்பாக மேலும் தெரியவருகையில் பெரிய நீலாவணை விபுலானந்தா வீதியில் வசிக்கும்  ஞா.ஜெயந்தசீலன் வயது 40 இவரே பலியாகியுள்ளார்.

கணவன் மனைவி இருவரும் பாடசாலைக்குச் செல்லும் போது சவளக்கடைச் சந்திக்கு  அருகில் மண்டூர் நோக்கிச் சென்ற பேருந்தை முந்துவதற்கு எந்தணித்தபோது இவ்விபத்து இடம்பெற்றதாகத் தெரியவருகிறது மேலதிக விசாரணையினை சவளக்கடைப்பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.










வீதி விபத்தில் ஆசிரியர் மரணம் மனைவி படுகாயம்-பாடசாலைக்குச் செல்லும் வழியில் சம்பவம்

Rating: 4.5
Diposkan Oleh:
Nadanasabesan samithamby

Post a Comment

0 Comments