Advertisement

Responsive Advertisement

பிக்குவின் கத்திக்குத்துக்கு மூவர் படுகாயம்!


பிக்கு ஒருவரின் கத்திக்குத்துக்கு இலக்காகிய நிலையில், பொலிஸ் கான்ஸ்டபிள், அவரது மனைவி மற்றும் அவரது சகோதரர் ஆகியோர் காயமடைந்து, தம்புளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


விகாரை​ கழிவுகளை பொலிஸ் கான்ஸ்டபிளின் இடத்தில் கொட்டியமை தொடர்பில், நேற்று காலை 8 மணியளவில் விகாரைக்கு வந்த கான்ஸ்டபிளுக்கும் குறித்த விகாரையின் தலை​மை பிக்குவுக்கும் இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கமே கத்திக்குத்தில் நிறைவடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தாக்குதல் சம்பவத்தின் போது, குறித்த கான்ஸ்டபிளால் தாக்குதலுக்கு இலக்கான, பிக்கு ஒருவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக, சீகிரியா பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணைகளை சீகிரிய பொலிஸார் முன்னெடுத்து வருவதாகத் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments