அவுஸ்ரேலியாவில் கைது செய்யப்பட்டுள்ள இலங்கை இளைஞன் அந்நாட்டின் முன்னாள் பிரதமர் மெல்கம் டர்ன்புல் மற்றும் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜூலி பிசப் ஆகியோர் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
|
அவுஸ்ரேலியாவில் பயங்கரவாத செயற்பாட்டுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் இலங்கையை சேர்ந்த 25 வயதான இளைஞர் ஒருவர் நேற்று கைது செய்யப்பட்டிருந்தார். குறித்த நபருக்கும், ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புக்கும் இடையில் தொடர்பு இருக்கலாம் என சிட்னி புலனாய்வு அதிகாரி மைக்கல் மெக்டிமென் சந்தேகம் வெளியிட்டிருந்தார்.
இந்நிலையில், சந்தேகநபர் தொடர்பில் மேலதிக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன்படி, அவுஸ்திரேலிய முன்னாள் பிரதமர் மெல்க்கம் டர்ன்புல் மற்றும் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜூலி பிசப் உட்பட பலர் மீது தாக்குதல் மேற்கொள்ள திட்டமிடப்பட்டிருந்தமை, அவரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் மூலம் தெரியவந்துள்ளது.
அத்துடன், அவரிடமிருந்து பல திட்டங்கள் குறித்த விபரங்கள் தெரியவந்துள்ளதாகவும் விசாரணையாளர்கள் தெரிவித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
|
0 Comments