Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

விசேட அதிரடிப்படை – பாதாள குழு மோதல் : அகுரஸ்ஸ திலக் உயிரிழப்பு


பொலிஸ் விசேட அதிரடிப் படையினரின் துப்பாக்கி சூட்டில் மாகும்புர மதுஷ்க என்ற பாதாள குழு தலைவரின் உதவியாளரான திலக் என்பவர் உயிரிழந்துள்ளார்.

மாத்தறை அகுரஸ்ஸ பகுதியில் நேற்று இரவு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

பொலிஸாரினால் சந்தேகத்திற்கிடமான முச்சக்கர வண்டியொன்றை சோதனையிட முற்பட்டபோது அந்த முச்சக்கர வண்டியில் இருந்தவர்களினால் பொலிஸ் அதிரடிப்படையினரை நோக்கி துப்பாக்கி சூடு நடத்திய போது பதிலுக்கு அதிரடிப்படையினர் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் அவர் உயிரிழந்துள்ளார்.

இதேவேளை பாதாள குழுவை சேர்ந்த சிலர் கும்புறுப்பிட்டிய பகுதியில் மறைந்திருப்பதாக கிடைக்கப்பெற்ற தகவல்களுக்கமைய தற்போது அந்தப் பகுதியில் விசேட அதிரடிப்படையினரால் தேடுதல்கள் நடத்தப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. -(3)

Post a Comment

0 Comments