மாத்தறை பகுதியில் நகைக் கடையொன்றில் கொள்ளையிட சென்ற போது பொலிஸார் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டு தப்பிச் சென்ற நிலையில் கைதான கொள்ளையர் குழுவின் பிரதான சந்தேக நபர் இன்றைய தினம் பொலிஸாரின் துப்பாக்கி சூட்டில் பலியாகியுள்ளார்.
நேற்றை தினம் கைதாகியிருந்த இவர் இன்று காலை தனது ஆடைகள் அடங்கிய பொதியை காட்ட பொலிஸாருடன் சென்ற போது தனது அந்த பொதியிலிருந்த கைக் குண்டொன்றை எடுத்து பொலிஸாரை நோக்கி வீச முயற்சித்த போது பொலிஸார் அவரை சுட்டு கொன்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. -(3)
0 Comments