செ.துஜியந்தன்
உலகநன்மை கருதி மட்டக்களப்பு ஸ்ரீ பேரின்ப ஞானபீடத்தில் மகா யாகம்
உலகநன்மை கருதியும், நாட்டுமக்களை நோய் நொடிகளில் இருந்து பாதுகாக்கும் பொருட்டு மட்டக்களப்பில் அமைந்துள்ள ஸ்ரீ பேரின்ப ஞானபீடத்தில் மகாயாகம் நடைபெற்றது.
காயத்திரி சித்தர் மகா யோகி முருகேசு சுவாமிகளின் சீடர் சற்குரு ஸ்ரீ புண்ணியரெத்தினம் சுவாமிகள் தலைமையில் இம் மகாயாகம் நடைபெற்றது. இவ் யாகத்தில் இந்தியாவில் இருந்து தருவிக்கப்பட்ட அதிசக்திவாய்ந்த 108 தெய்வீக மூலிகைகள் பயன்படுத்தப்பட்டன.
0 Comments