Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

2018 ஆம் ஆண்டுக்கான ஸஹிரியன் பிரிமியர் லீக் ( ZPL ) சம்பியன் கிண்ணத்தை கிறிக் 90 அணியினர் சுவீகரித்துக் கொண்டனர்.

( எம்.ஐ.எம்.அஸ்ஹர் , யு.கே.காலித்தீன்)
கல்முனை ஸாஹிரா தேசியக் கல்லூரியில் கல்வி கற்ற 2001 ஆம் ஆண்டு தொகுதி மாணவர்களை பிரதானமாககொண்ட கல்முனை ஸாஹிரா தேசியக் கல்லூரி பழைய மாணவர் அமைப்பு ( ZOPA )ஒழுங்கு செய்திருந்தஸாஹிரா பழைய மாணவர்களின்  எண்ணக்கருவில் திட்டமிடப்பட்டு ஒழுங்கமைக்கப்பட்டு  வடிவமைக்கப்பட்டுள்ள 8 ஓவர்கள் கொண்ட 11 பேர் பங்கு கொள்ளும்  ஸஹிரியன் பிரிமியர் லீக் கிறிக்கட் சுற்றுப்போட்டியின்  இறுதிப் போட்டியில்  கிறிக் 90  அணியினர் 8 விக்கட்டுகளினால்  சுப்பர் வொரியர்ஸ் அணியைதோற்கடித்து  2018 ஆம் ஆண்டுக்கான ஸஹிரியன் பிரிமியர் லீக் சம்பியன் கிண்ணத்தை சுவீகரித்துக்கொண்டனர்.
கடந்த வெள்ளிக்கிழமை ( 22) கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரி மைதானத்தில் ஆரம்பமான மேற்படி சுற்றுப்போட்டியில் இக்கல்லூரியில் கல்வி பயின்ற 20 பழைய மாணவர் அணிகள்  கலந்து கொண்டன.
24 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற இறுதிப் போட்டியில் கிறிக் 90  அணியினரும் சுப்பர் வொரியஸ்அணியினரும் போட்டியில் ஈடுபட்டனர்.
முதலில் துடுப்பெடுத்தாடிய சுப்பர் வொரியஸ் அணியினர் 8 ஓவர்களில் 8 விக்கட்டுக்களை இழந்து 50 ஓட்டங்களைப் பெற்றனர்பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய கிறிக் 90 அணியினர் 5.1 ஓவர்களில் 2 விக்கட்டுக்களைஇழந்து 51 ஓட்டங்களைப் பெற்று 8 விக்கட்டுக்களினால் வெற்றி பெற்றனர்.
கல்முனை ஸாஹிரா தேசிக் கல்லூரி அதிபர் எம்.எஸ்.முஹம்மட் தலைமையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில்பிரிவெல்த் குளோபல் நிறுவனத்தின் கூட்டு இணைப்பாளர் யு.எல்.முஹம்மட் சாஜித் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.
கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரியில் கல்வி பயின்ற பழைய மாணவர் அணிகளான  கஜபா 08 , கிறிக் 90 , அரேபியன் புள்ஸ் , ரீம் 92 2011 , மெக்ஸ் சாஜேர்ஸ் அணி ,  பும் பும் 03 , அலியார் றெஜிமென்ட் , பீ 05 2005 ,ஸஹிரியன் லயன்ஸ் , சுப்பர் வொரியர்ஸ் அணி ,  ஸஹிரியன் 98 , ஸெஸ்டோ 99 , ஸஹிரியன் வைருகே , கிளஸிகல் ஸீரோ வன் , ஸஹிரியன் யுனைடெட்  அணி ,  கிளாஸ் ஒப் 13 , லெஜன்ஸ் ஒப் ஸஹிரியன்ஸ் , ஸஹிரியன் விக்கிங்ஸ் , ஸஹிரியன் ரெட் பேக்ஸ் , ஸஹிரா சுப்பர் கிங்ஸ் அணி ஆகியன பங்கேற்றன.

சம்பியன்களாக தெரிவு செய்யப்பட்ட கிறிக் 90  அணிக்கு சம்பியன் கிண்ணமும் 10,000 ரூபா பணப்பரிசும் , பதக்கங்களும் ,இரண்டாம் இடம்பெற்ற சுப்பர் வொரியஸ் அணிக்கு வெற்றிக் கிண்ணத்துடன் 5,000 ரூபாபணப்பரிசும்  பதக்கங்களும்  அதிதிகளினால் வழங்கப்பட்டன.


இறுதிப் போட்டியில் சிறப்பாட்டக் காரார் விருது கிறிக் 90 அணியைச் சேர்ந்த எம்..எம்றிபானுக்கும்   ,சுற்றுப்போட்டி தொடர் ஆட்டநாயகன் விருது எஸ்..அஸாமிற்கும் வழங்கப்பட்டன.

Post a Comment

0 Comments