முள்ளிவாய்க்கால் நினைவு தினமாகிய இன்று நிகழ்வுகள் சற்றுமுன்னர் ஆரம்பமாகியுள்ளன.இந்த நிகழ்வில் முள்ளிவாய்க்காலில் படுகொலை செய்யப்பட்ட மக்களுக்காக மௌன அகவணக்கம் செலுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து வடக்கு மாகாண சபை முதலமைச்சர் நீதியரசர் சீ.வி.விக்கினேஸ்வரன் உரையாற்றிக் கொண்டிருக்கின்றார். இதை தொடர்ந்து உயிர் நீத்த உறவுகளிற்கு அஞ்சலி செலுத்தும் வகையில் பொதுமக்களுக்கு ஒழுங்குகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன.
தமது உறவுகளை இழந்து நிற்கும் மக்கள் கண்ணீர் விட்டு கதறி அழும் காட்சி அங்குள்ளவர்களின் கண்களையும் குளமாக்கும் காட்சி மனதை நெகுளவைக்கிறது.அதுமட்டுமில்லாமல் இந்தமுறை இயற்கையும் முள்ளிவாய்க்கால் உறவுகளுக்கு கண்ணீர் வடிக்கிறாள்.இந்த வருடம் ஒரு போதும் இல்லாத அளவிற்கு பொதுமக்கள் படையடுத்து வந்துள்ளமை அவதானிக்க கூடியதாகவுள்ளது.(15)



0 Comments