( எம்.ஐ.எம்.அஸ்ஹர்)
சித்திரைப் புதுவருடத்தையொட்டி பாடசாலைகளுக்கிடையில் நல்லிணக்கத்தையும் ஒருமைப்பாட்டையும்புரிந்துணர்வையும் ஏற்படுத்தும் வகையில் பட்டிருப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட களுதாவளை மகாவித்தியாலய அதிபர் ,பிரதி அதிபர்கள் ,ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களால் ” நல்லிணக்க கலை கலாசாரவிளையாட்டு ” நிகழ்வுகளின் ஒரு பகுதியாக கடந்த செவ்வாய்க்கிழமை ( 22 ) பாடசாலையில் மைதானத்தில் இடம்பெற்ற சினேகபுர்வ கிறிக்கட் போட்டியில் பட்டிருப்பு தேசிய பாடசாலை , களுவாஞ்சிகுடி ஆசிரியர் அணி 6 விக்கட்டுக்களினால் வெற்றி பெற்றது.
முதலில் துடுப்பெடுத்தாடிய களுதாவளை மகா வித்தியாலய ஆசிரியர் அணி 6 ஓவர்களில் 2 விக்கட்டுக்களை இழந்து 51 ஓட்டங்களைப் பெற்றது. பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பட்டிருப்பு தேசிய பாடசாலை , களுவாஞ்சிகுடி ஆசிரியர் அணி 4.5 ஓவர்களில் 2 விக்கட்டுக்களை இழந்து 52 ஓட்டங்களைப் பெற்று வெற்றியினை தனதாக்கிக் கொண்டனர்.
பாடசாலை அதிபர் திரு.பே.காப்தீபன் தலைமையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் தென்கிழக்குபல்கலைக்கழக சிரேஸ்ட விரிவுரையாளர் கலாநிதி திருமதி. சு.வரதராஜன் பிரதம அதிதியாக கலந்து கொண்டார். பாடசாலை பிரதி அதிபர்களான செ.செந்தில்குமார் , திருமதி.சு.சுரேஸ் குமார் , பொறுப்பாசிரியைதிருமதி.வ.புவனேந்திரராஜா , பட்டிருப்பு தேசிய பாடசாலை , களுவாஞ்சிகுடி சிரேஸ்ட ஆசிரியர்எம்.குமாரசிங்கம் ஆகியோர் அதிதிகளாக கலந்து கொண்டனர்
0 Comments