Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

உண்மை கண்டறியும் ஆணைக்குழுவை அமைக்குமாறு பிரித்தானியா வலியுறுத்தல்!

யுத்தத்தின் போது இடம்பெற்ற விடயங்கள் குறித்த உண்மைகளைக் கண்டறிவதற்காக தென்னாபிக்க பாணியிலான உண்மை கண்டறியும் ஆணைக்குழுவை இலங்கை அரசாங்கம் அமைக்க வேண்டும் என பிரித்தானியா வலியுறுத்தியுள்ளது.
உண்மை, நீதி, நல்லிணக்கம் மற்றும் மீள் நிகழாமை தொடர்பான ஆணைக்குழுவை அமைக்க உள்ளதாக கடந்த 2015 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தமது நோக்கத்தை முன்வைத்திருந்தது. இலங்கையின் செயற்பாடுகளில் ஓரளவு முன்னேற்றம் காணப்படுகின்ற போதும், எதிர்ப்பார்த்ததை விட அது மெதுவானதாகவே உள்ளது என ஆசிய மற்றும் பசுபிக் விவகாரங்களுக்கான பிரித்தானிய அமைச்சர் மார்க் ஃபீல்ட் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு ஒன்றை அமைப்பதற்கான சட்ட வரைவுகள் தயாரிக்கப்பட்டு, அந்த ஏற்பாடுகள் நீதித்துறை பொறிமுறைக்குள் உள்வாங்கப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
போருக்குப் பின்னரான தமது முழுமையான கடப்பாடுகளை அரசாங்கம் நிறைவேற்றுவதை தாம் எதிர்ப்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த நிலையில், நெருங்கிய நண்பன் என்ற வகையில், இலங்கை அரசாங்கத்தின் விரைவான முன்னேற்றங்களுக்கு தாம் ஒத்துழைப்பையும், ஊக்குவிப்பையும் வழங்குவதாகவும் ஆசிய மற்றும் பசுபிக் விவகாரங்களுக்கான பிரிட்டன் அமைச்சர் மார்க் ஃபீல்ட் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments