Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

தினேஷ் கார்த்திக் அடித்த கடைசி பந்து சிக்ஸரால் உயிரிழந்த ஆசிரியர்

இந்தியா,இலங்கை,பங்களாதேஷ் இடையேயான முத்தரப்பு டி 20 கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் பங்களாதேஷ் இந்திய அணிகள் மோதின.
20 ஓவர்களில் பங்களாதேஷ் 8 விக்கெட் இழப்பிற்கு 166 ரன்கள் எடுத்த நிலையில், இந்திய அணி வெற்றிக்கு கடைசி நேரத்தில் திருப்புமுனையை ஏற்படுத்திய தினேஷ்கார்த்திக் 8 பந்துகளில் 29 ரன்கள் அடித்து  இந்திய அணிக்கு வெற்றியை பறித்துக் கொடுத்தார்.
கடைசி பந்தில் ,சிக்ஸர் அடித்து இந்தியாவின் வெற்றியை உறுதிபடுத்தினார்.இறுதியில் இந்திய அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 168 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.  இந்த ஒரு தருணம் ஒட்டுமொத்த இந்தியாவையும்  அவரை   திரும்பி பார்க்க வைத்தது.

இந்நிலையில், சூரத்தை சேர்ந்த பள்ளி ஆசிரியர் ஒருவர் மிகவும் ஆர்வமாக அந்த கிரிக்கெட் போட்டியை   பார்த்துள்ளார்.அப்போது கடைசிபந்தில் இந்தியா வெற்றி பெறுமா என்ற அழுத்தத்தில் இருந்த அவர், தினேஷ் கார்த்திக் அடித்த சிக்ஸரை பார்த்து இன்ப  அதிர்ச்சி அடைந்த அவர்  மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்து உள்ளார். 

Post a Comment

0 Comments