Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

அரசாங்கம் கடுமையான விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும்! - சம்பந்தன் எச்சரிக்கை

ஜெனிவா தீர்மானத்தை நிறைவேற்றுவதை மேலும் தாமதப்படுத்தினால், இலங்கை அரசாங்கம் கடுமையான விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் இலங்கை பாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான இரா. சம்பந்தன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஜெனிவாவில் இடம்பெற்ற மனித உரிமைப் பேரவையின் கூட்டத் தொடர் குறித்து, கருத்துத் தெரிவித்த போதே அவர் இந்த கடும் எச்சரிக்கையினை விடுத்துள்ளார். குறித்த விடயம் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு என்ன என்று வினாவப்பட்டபோது அரசாங்கம் இந்த விடயத்தில் தொடர்ந்தும் பின்னடித்தால் கடும் பின் விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும் என்றார்.

Post a Comment

0 Comments