Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

விலங்கு விசர் நோய்த் தொற்றுக்குள்ளாகி தப்பியோடிய குடும்பஸ்தர் வடமராட்சியில் பரபரப்பு

வடமராட்சி மந்திகை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த குடும்பத்தலைவர் அங்கிருந்து திடீரென வெளியேறியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.குடும்பத்தலைவர் விலங்கு விசர் நோய்த் தொற்றுக்குள்ளாகி அவருடைய மனைவி மற்றும் மகளைக் கடித்தார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
அவர்கள் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றும் வரும் நிலையில் குடும்பத்தலைவருக்கு உரிய சிகிச்சை வழங்கப்பட முன்னரே வெளியேறிவிட்டதாக கூறப்படுகின்றது.வடமராட்சி, அல்வாயைச் சேர்ந்த குடும்பத்தலைவரை ஒருவருக்கு சுமார் 6 மாதங்களுக்கு முன்னர் நாய் கடித்துள்ளது. அவர் உரிய சிகிச்சை பெற்றுக்கொள்ளவில்லை.இதனால், குடும்பத்தலைவரின் நடவடிக்கைகளில் கடந்த சில நாள்களாக மாற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் அவர் தனது மனைவி மற்றும் மகளுக்கு கடித்துள்ளார்.அதனையடுத்து குடும்பத்தலைவரும் அவருடைய மனைவி மற்றும் மகளும் மந்திகை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
மூவருக்கும் விலங்கு விசர் நோய்த் தடுப்பூசி ஏற்றுவதற்கு வைத்தியசாலையில் ஏற்பாடு செய்யப்பட்ட நிலையில் குடும்பத்தலைவர் அங்கிருந்து வெளியேறிவிட்டார் எனக் கூறப்படுகின்றது.இதனால் மந்திகை வைத்தியசாலை மற்றும் அல்வாய் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. சிலர் தமது வீட்டு வாசல் படலைகளை பூட்டுப் போட்டு மூடியிருந்தனர். குறித்த குடும்பத்தலைவரை நேற்று மாலை வரையில் கண்டுகொள்ள முடியவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

Post a Comment

0 Comments