Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

கொழும்பை மூடிய பனி மூட்டம்

கடந்த சில நாட்களாக கொழும்பு உள்ளிட்ட பகுதிகளில் காலை கடும் பனிமூட்டம் நிலவுகின்றது.
குறிப்பாக மேல் மாகாணத்தின் பல பிரதேசங்களில் இந்த நிலைமையை அவதானிக்க கூடியதாக உள்ளதென தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் கொழும்பில் உயரமான கட்டிடங்களிலிருந்து பார்க்கும் போது கீழே உள்ள கட்டிடங்கள் தெரியாதளவுக்கு பனி மூட்டம் நிலவுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த பனி மூட்டத்துடனான காலநிலையானது எதிர்வரும் சில மாதங்களுக்கு மத்திய, மேல், வடமேல் மற்றும் சப்ரகமுவ முதலான மாகாணங்களில் நீடிக்க கூடும் என காலநிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.
கீழே உள்ள படம் கொழும்பிலுள்ள உலக வர்த்தக மைய கட்டிடத்தில் இருந்து இன்று காலை எடுக்கப்பட்டது. 1513322488_2879570_hirunews_wethar

Post a Comment

0 Comments