Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

கொக்கட்டிச்சோலையில் சட்ட விரோதமாக கொண்டுசென்ற மாடுகளை வளைத்து பிடித்த பொதுமக்கள்

மட்டக்களப்பு மாவட்டத்தின் கொக்கட்டிச்சோலையில் நேற்று புதன்கிழமை(06) இரவு சட்ட விரோதமாக கொண்டுசெல்லப்பட்ட மாடுகள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் அதனைக்கொண்டு சென்ற வாகனமும் கைப்பற்றப்பட்டதுடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.அண்மைக்காலமாக பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் மாடுகள் காணாமல்போனமை தொடர்பில் பல்வேறு முறைப்பாடுகள் தெரிவிக்கப்பட்டுவந்தது.
இது தொடர்பில் கொக்கட்டிச்சோலை பொலிஸார் சிவில் பாதுகாப்பு குழுக்கள்,கிராமிய குழுக்களை தெளிவுபடுத்திவந்தனர்.இதனடிப்படையில் இளைஞர் குழுவினர் விழிப்புடன் செயற்பட்டுவந்த நிலையில் குறித்த மாடு கொண்டுசெல்லப்படுவது பிடிக்கப்பட்டுள்ளது.
நேற்று புதன்கிழமை(06) இரவு 8.00மணியளவில் கொக்கட்டிச்சோலை பகுதியுடாக சிறிய கன்டர் வாகனத்தில் மாடுகள் கொண்டுசெல்லப்படுவதை அவதானித்த இளைஞர்கள் குழுவினர் குறித்த வாகனத்தை மடக்கிப்பிடித்துள்ளனர்.
இதன்போது சிறிய கன்டர் ரக வாகனத்தில் ஏழு மாடுகள் அடைக்கப்பட்டு கொண்டுசெல்லப்பட்டுள்ளதுடன் குறித்த மாடுகளைக்கொண்டுசெல்வதற்கான எந்த அனுமதிப்பத்திரங்களையும் உரியவர் கொண்டிருக்கவில்லையென கொக்கட்டிச்சோலை பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த மாடுகள் எங்காவது கொள்ளையிடப்பட்டதா அல்லது யாராவது விற்பனை செய்தார்களா என்பது தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாக தெரிவித்த பொலிஸார் விசாரணைகளின் பின்னர் நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் தெரிவித்தனர்.
இதேவேளை பட்டிப்பளை பகுதியில் பல வருடங்களாக மாடுகள் காணாமல்போகும் சம்பவங்கள் நடைபெற்றுவருவதாகவும் ஆனால் உரியவர்கள் இதுவரையில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையென பிரதேச மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
மாடுகளை வளர்த்து அதன் மூலம் தமது குடும்ப வருமானங்களை ஈட்டும் குடும்பத்தினர் இதனால கஸ்டங்களை எதிர்கொள்வதாகவும் அவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
DSC03738DSC03742DSC03744

Post a Comment

0 Comments