Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

தமது கட்சியின் காலத்திலேயே மட்டக்களப்பில் பாரிய அபிவிருத்தி நடந்தது

தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் காலத்திலேயே மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ளுராட்சிசபைகள் ஊடாக பாரிய அபிவிருத்திகள் மேற்கொள்ளப்பட்டதாக அக்கட்சியின் பொதுச்செயலாளரும் முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான பி.பிரசாந்தன் தெரிவித்தார்.தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பெருமளவான ஆதரவாளர்கள் புடைசூழ வருகைதந்து மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இன்று பிற்பகல் வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டது.
வாகன பேரணியாக மட்டக்களப்பு மாவட்ட செயலகம் வரையில் வந்த ஆதரவாளர்களும் வேட்பாளர்களும் வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர்.
தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பொதுச்செயலாளர் பி.பிரசாந்தன்,மகளிர் அணித்தலைவி திருமதி செல்வி மனோகர்,உபதலைவர் யோகவேள்,முன்னாள் மட்டக்களப்பு மாநகரசபை பிரதி முதல்வர் ஜோர்ஜ்பிள்ளை உட்பட பலர் கலந்துகொண்டனர்.
இதன்போது மட்டக்களப்பு மாநகரசபை உட்பட ஐந்து உள்ளுராட்சி சபைகளுக்கான வேட்பு மனுக்கல் தாக்கல்செய்யப்பட்டன.
DSC04799

Post a Comment

0 Comments